search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கோவை கள்ளநோட்டு பறிமுதல்"

    கள்ள நோட்டு கும்பலுக்கு உதவிய திருப்பூரை சேர்ந்த உதய் பிரகாஷ், விஜயகுமாரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    கோவை:

    கோவை சாய்பாபா காலனி அருகே வேலாண்டி பாளையத்தில் வாடகைக்கு கடை எடுத்து தங்கி ரூ.1¼ கோடி மதிப்புள்ள 2 ஆயிரம் ரூபாய் கள்ள நோட்டுகள் அச்சடித்த 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

    கும்பல் தலைவனான காரமடையை சேர்ந்த சுந்தர் (வயது 38), வடவள்ளியை சேர்ந்த கிதர் முகமது(58) ஆகிய இருவரையும் 5 நாள் காவலில் எடுத்து விசாரிக்க கோர்ட்டு அனுமதி வழங்கியது.

    இதைத்தொடர்ந்து கடந்த 14-ந் தேதி முதல் இருவரையும் காவலில் எடுத்து போலீசார் விசாரணை நடத்தப்பட்டது. கேரளாவில் இருந்து புற்றுநோய் மருந்து வாங்கி விற்பனை செய்வதற்காக கடை வேண்டும் என சுந்தர் கேட்டதால் கடந்த 1½ மாதத்துக்கு முன்பு இந்த கடையை வாடகைக்கு எடுத்து கொடுத்ததாக ஆனந்த் ஏற்கனவே போலீசாரிடம் கூறி இருந்தார்.

    சுந்தரிடம் நடத்திய விசாரணையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு திருப்பூரில் இருந்து ஜெராக்ஸ் எந்திரங்கள், கள்ளநோட்டு அச்சடிப்பதற்காக வெள்ளை காகிதங்களை வாங்கி வந்து 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளை வைத்து கள்ளநோட்டு அச்சடித்ததாக கூறி உள்ளார்.

    இதுவரை அச்சடித்த நோட்டுகளை புழக்கத்தில் விடுவதற்காக ஏஜெண்டுகளிடம் பேசி வந்த நிலையில் போலீசாரிடம் சிக்கிக் கொண்டதாக வாக்குமூலம் அளித்துள்ளார்.

    தொடர்ந்து நடந்த விசாரணையில் திருப்பூரை சேர்ந்த உதய் பிரகாஷ், விஜயகுமார் ஆகிய இருவரும் கள்ள நோட்டுகளை அச்சடிப்பதற்காக நவீன ஜெராக்ஸ் எந்திரங்களை இவர்களுக்கு வாங்கிக் கொடுத்தது தெரிய வந்தது. இதைத்தொடர்ந்து போலீசார் அவர்கள் இருவரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இவர்கள் இருவரையும் இன்று கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைக்க உள்ளனர். இவர்கள் இதற்கு முன்பு யார்-யாருக்கெல்லாம் கள்ள நோட்டு அச்சடிப்பற்காக ஜெராக்ஸ் எந்திரங்களை வாங்கி கொடுத்தார்கள்? இவர்களுடன் கள்ள நோட்டு கும்பலை சேர்ந்த யார்-யார் தொடர்பில் இருந்தார்கள்? என்று விசாரணை நடத்துவதற்காக இருவரையும் காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் திட்டமிட்டுள்ளனர்.

    குமபல் தலைவன் சுந்தர் மற்றும் கிதர் முகமதுவின் போலீஸ் காவல் இன்றுடன் முடிவடைகிறது. எனவே இருவரையும் இன்று மாலை கோர்ட்டில் ஆஜர்படுத்த உள்ளனர்.

    ×